மேஷ ராசி


மேஷ லக்னத்தில் சூரியன் இருப்பதன் பலன்கள் இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக சிவந்த மேனியும் பாந்தமான பருமனும் களை உள்ள முகமும் நன்றாக இருப்பார் கல்வியானாலும் புத்தியானாலும் அறிவாளியாக இருப்பார் மனிதர்களின் புத்திமான் குரு இல்லாமலேயே வித்தைகளை விருத்தி செய்து கொள்ளும் திறன் உண்டு மெத்த படித்த மேதாவி உயர்கல்வி கற்பார் கணவன் மனைவிக்கு இடையே தளராத ஒருவித இருக்கும் தன் வாழ்க்கையை துணைவரால் சுகமான பலன்கள் கிடையாது உடல் சார்ந்த விஷயமான உடலுறவு இவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் கல்வியில் அதிக நாட்டம் உள்ளவர் இவர் கலவியல் நாட்டம் கொள்ள மாட்டார் தொழில் வாய்ப்புகளை தேடி இவர் செல்ல மாட்டார் வாய்ப்புகள் தன்னை தேடி வர வேண்டும் என்று பிரிவாதமாக உட்கார்ந்து இருப்பார். செய்கின்ற தொழிலில் மேலும் மேலும் முன்னேறி செல்ல வேண்டுமென்று ஆசையும் திட்டமும் இருக்காது தன் குழந்தைகளால் மகிழ்ந்திருப்பார் புத்திர சுகி யோகம் பெற்றவர்
4.5க்குரியவர்கள் இணைந்தால் மேஷ லக்னத்தார்க்கு ராஜயோகம் உண்டாகும் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. சூரியனும் சந்திரனும் இணைந்து மேஷ் லக்னத்துக்கு எத்தனையாவது இடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. மேலும், சூரியனும் சந்திரனும் இணைவதால் எந்தவிதமான ராஜயோகம் உண்டாகும் என்றும் சொல்லப்படவில்லை. நமது சிற்றறிவுக்குப் புலனாகியவற்றைக் கொண்டு இது சம்பந்தமான சில விஷயங்களை இங்கு கூறுவோம்.
4ஆமிடம் என்பது வாகன ஸ்தானமாகும். ஒரு மனிதன் எக்காலத்தும் பிரபலமான வாகன யோகத்துடன் விளங்குவதற்கு இந்த ஸ்தானாதிபதி பலம் பெற்றும், நல்ல ஸ்தானாதிபதியுடன் சேர்ந்தும் இருத்தல் அவசியம்.
சந்திரன் சூரியனுடன் கூடி நட்பு, ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் எந்நேரமும் வாகனத்திலேயே சஞ்சரிப்பான்.